(சட்டச் சொற்கள் விளக்கம் 1021-1025 – தொடர்ச்சி)

1026. Avenue        வாய்ப்பு

அணுகு வழி

நிழற்சாலை  

Avenue என்பது நிழற் சாலையைக் குறித்தாலும் சட்டத்தில் வாய்ப்பு அல்லது அணுகு வழி என்ற பொருளில் வரும்.

ஒரு குறிப்பிட்ட சிக்கலுக்குத தீர்வு காண்பதற்காக அனைத்துச் சட்ட வழிகளையும அல்லது வாய்ப்புகளையும்  ஆராய்தல்.
 1027. average     சராசரி

நிரவல்,

நிரலளவு,
ஏறத்தாழ,
கிட்டத்தட்ட

சராசரி என்பது தமிழ்ச்சொல்லே. சரி விகிதமாக, சரிக்குச் சரியாக அமைவதால் சரிச்சரி > சராசரி ஆயிற்று.

சட்டத்தில் சராசரி என்பது சராசரி விதியைக் குறிக்கிறது.

சராசரிக் கூலி, சராசரி ஊதியம் முதலானவை தொடர்பாகச் சட்டவிதிகள் உள்ளன; வழக்குக் குறிப்புகள், தீர்ப்புரைகளும் உள்ளன.
1028. Average, excessசராசரி மிகை

நிரவல் மிகை

‘சராசரி மிகை’  என்பது ஒரு தரவுத் தொகுப்பில் உள்ள மதிப்புகள்.

‘மிகுதியின் சராசரி’ என்ற பொருளில் கருதக்கூடாது. அவ்வாறு கருதினால் மிகுதியாகக் கிடைப்பவற்றின் சராசரி என்றாகும். சராசரியினை விட மிகுதியாக உள்ளது என்னும் பொருளிலேயே பார்க்க வேண்டும்.

உண்மையான சராசரியை விட அதிகமாக மதிப்பிடப்படும் போக்கைக் குறிக்கிறது. சராசரி ஆதாயத்தை விட மிகுதியாகக் கிடைக்கும் ஆதாயத்தைத் தொழிலாளர் களுக்குப் பகிர்நதளிப்பது சிக்கலாகும் பொழுது இது சட்ட வரம்பிற்கு வந்து விடுகிறது.
1029. Averment               உறுதிக்கூற்று

வழக்காட்டத்தின் பொழுது, ஒரு செய்தி அல்லது நிகழ்வு அல்லது சூழல் அல்லது கூற்று அல்லது வாதம் அல்லது ஊகத்திற்கு எதிராக எண்பிப்பதற்காக மெய்யெனக் கூறும் உறுதிக் கூற்று.
1030. Averred        உறுதியாகச் சொல்லப்பட்டது.

வழக்கு மன்றத்தில் சட்டஆவணம் போன்ற மெய்யுரைக் கூற்றாகச் சொல்லப்படுவது.

சில இடங்களில் பாராட்டப் பட்டது எனக் குறிக்கப்படுகிறது.

காண்க: Averment