தலைப்பு-பாரதியார் வாழ்வியல் கட்டளைகள் : thalaippu_bharathiyaarin_vaazhviyal kattalaikal02

பாரதியாரின் வாழ்வியல் கட்டளைகள்: 13
13. தன்மதிப்பைப் பொன் போல் போற்று!
 அனைத்திலும் ஒருவருக்கு அடிப்படையான தேவை தன்மானம் பேணித் தன்மதிப்புடன் வாழ்வது. சாதிப் பிரிவுகள் மக்களைத் தன்மதிப்பிழக்கச் செய்து தாழ்வுபடுத்துகின்றன. எனவேதான் பாரதியார், “சாதிப்பிரிவுகள் சொல்லி – அதில் தாழ்வென்றும் மேலென்றும்” கொள்ளும் போக்கைக் கண்டித்துச் “சாதி நூறு சொல்லுவாய் போ போ போ” என விரட்டுகிறார். சில வகுப்பார் அடிமையாய் உழைப்பதற்கே பிறந்தவர் என்றும், ஒரு வகுப்பார் அவர் உழைப்பில் தாம் பிழைக்கப் பிறந்தவர் என்றும் கூறும் இழிநிலை இன்றும் இருக்கிறது. எனவே,
        “தொண்டர் என்றோர் வகுப்பில்லை – தொழில்
                சோம்பலைப் போல் இழிவில்லை”
என அதனை மறுப்பதன் மூலம்   “எல்லாரும் ஓர் நிறை” என்பதனைப் பாரதியார் விளக்குகிறார் எனலாம். எனவே, அடிமையுணர்வில் தாழாமல் தன்மதிப்புடன் வாழப் பின்வருமாறு கட்டளையிடுகிறார்:-
‘ஞமலிபோல் வாழேல்’ (ஆ.சூ 37) ‘மானம் போற்று’ (ஆ.சூ 76) ‘தன்மை இழவேல்’ (ஆ.சூ 42) ‘தாழ்ந்து நடவேல்’ (ஆ.சூ 43).
– இலக்குவனார் திருவள்ளுவன்
தலைப்பு-தொடரும் : thalaippu_thodarum