இலக்கியங்கள் கூறும் தமிழர்க்கான காவிரி 11- 30
- இலங்கு நீர் காவிரி இழி புனல் வரித்த: தாயங்கண்ணனார், அகநானூறு, 213.22
- தாழ் இரும் கதுப்பின் காவிரி வவ்வலின்: பரணர், அகநானூறு, 222.8
- விடியல் வந்த பெரு நீர் காவிரி: பரணர், அகநானூறு, 226.10
- கழை அளந்து அறியா காவிரி படப்பை: பரணர், அகநானூறு, 326/10
- நாடு ஆர் காவிரி கோடு தோய் மலிர் நிறை: ஆவூர் மூலங்கிழார், அகநானூறு 4
- காவிரி கொண்டு ஒளித்து ஆங்குமன்னோ: பரணர், அகநானூறு, 376.11
- காவிரி படப்பை உறந்தை அன்ன: குடவாயிற் கீரத்தனார், அகநானூறு, 385.4
- நெடு நீர் காவிரி கொண்டு ஒளித்து ஆங்கு நின் பரணர், அகநானூறு, 396.14
- காவிரி மலிர் நிறை அன்ன நின்: ஓரம்போகியார், ஐங்குறுநூறு, 42.3
- காவிரி
(காவிரியாற்றில் பலர் நீராடுகின்ற பெருந்துறை)
- கலுழி மலிர் நிறைக் 5
பரணர், பதிற்றுப்பத்து, 50.5-6
(கலங்கல் மிகுந்த வெள்ளம் நிறைந்த காவிரி போலன்றியும்)
- காவிரி மண்டிய சேய் விரி வனப்பின் –
(காவிரிநீர் மிகுந்துள்ள, தொலைவிலேயே விரிந்து தோன்றும் அழகினையுடைய (புகார்))
- காவிரி படப்பை நன் நாடு அன்ன – பெருங்குன்றூர் கிழார், பதிற்றுப்பத்து, 47
- அம் தண் காவிரி வந்து கவர்பு ஊட்ட – வெள்ளைக்குடி நாகனார், புறநானூறு, 35.8
- மிக்கு வரும் இன் நீர் காவிரி – தாமப்பல் கண்ணனார், புறநானூறு, 22
- நீயே தண் புனல் காவிரி கிழவனை – காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார், புறநானூறு, 58.1
- சுரந்த காவிரி மரம் கொல் மலி நீர் – கோவூர் கிழார், புறநானூறு, 68/9
- பூ விரி புது நீர் காவிரி புரக்கும் – புறநானூறு, 166.28
- இரங்கு புனல் நெரிதரு மிகு பெரும் காவிரி/மல்லல் நன் நாட்டு அல்லல் தீர – நப்பசலையார், புறநானூறு, 174.8,9
- காவிரி அணையும் தாழ் நீர் படப்பை – கல்லாடனார், புறநானூறு, 385.8
(தொடரும்)
நன்றி : http://tamilconcordance.in/concordance_list-B.html
இலக்குவனார் திருவள்ளுவன்
No comments:
Post a Comment