இலக்கியங்கள் கூறும் தமிழர்க்கான காவிரி 31-50
- காவிரி புரக்கும் நன் நாட்டு பொருந – நல்லிறையனார, புறநானூறு, 393.23
- முழங்குநீர்ப் படப்பைக்
(முழங்குகின்ற நீர்நலம் உடைய காவிரி பாயும் நாட்டுத் தலைவன்)
33. காவிரி புரக்கும் நாடு கிழவோனே – முடத்தாமக்கண்ணியார், பொருநராற்றுப்படை, 248
(காவிரியால் காக்கப்படும் நாட்டிற்கு உரியவனே!)
34. மலைத்தலைய கடல் காவிரி
புனல் பரந்து பொன் கொழிக்கும் – கடியலூர் உருத்திரங் கண்ணனார், பட்டினப்பாலை, 6,7
(மலைகளிலிருந்து வரும் நீரால் கடல்போல்பரந்துள்ள காவிரியின் நீர்ப்பெருக்கு விளைநிலம் எங்கும் பரவிச் செல்வம் குவியும்)
35. மாஅ காவிரி மணம் கூட்டும் – கடியலூர் உருத்திரங் கண்ணனார், பட்டினப்பாலை, 116
(காவிரிப்பேராற்றின் நறுமணம்மிகுந்த மணற்கரை)
36. கங்கை வாரியும் காவிரி பயனும் – கடியலூர் உருத்திரங் கண்ணனார், பட்டினப்பாலை, 190
(கங்கையாறு வாரிக்கொடுத்தனவும் காவிரியின் விளைச்சலும்)
37. குட மலை பிறந்த தண் பெரும் காவிரி – இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார், மலைபடுகடாம், 527
(குடமலையில் பிறந்த குளிர்ச்சியான பெரிய காவிரி)
38.காவிரி நாடன் திகிரி போல் பொன் கோட்டு – இளங்கோ அடிகள், சிலப்பதிகாரம், புகார்க் காண்டம் 1.5
(காவிரியை உடைய சோழனது சக்கரம்போல் பொன்போல் தோற்றமளிக்கும்(மேருமலையின்)உச்சி(யை வலமாகச் சுற்றி வருவதால்)
39.தண் நறும் காவிரி தாது மலி பெரும் துறை – இளங்கோ அடிகள், சிலப்பதிகாரம், புகார்க் காண்டம் 5.165
(குளிர்ச்சியும் நறுமணமுமம் மிக்க காவிரியின் பூந்தாது நிறைந்த பெருந்துறை)
40.தாங்கா விளையுட் காவிரி நாடும் காட்டி பின்னர் – இளங்கோ அடிகள், சிலப்பதிகாரம், புகார்க் காண்டம் 6.30-31
(நிலம் தாங்க இயலா அளவு விளைச்சலைத் தரும் காவிரி(பாயும் சோழ) நாட்டினைக் காட்டி)
41.கடற்கரை மெலிக்கும் காவிரி பேரியாற்று – இளங்கோ அடிகள், சிலப்பதிகாரம், புகார்க் காண்டம் 6.163
(கடலின் கரையை மோதி இடிக்கும் காவிரிப்பேராறு)
42.காவிரியை நோக்கினவும் கடல் கானல் வரி பாணியும் – இளங்கோ அடிகள், சிலப்பதிகாரம், புகார்க் காண்டம் 7.19
(காவிரிபற்றிய கடல்கானல் வரிப்பாடல்களை)
43.கடலொடு காவிரி சென்று அலைக்கும் முன்றில் – இளங்கோ அடிகள், சிலப்பதிகாரம், புகார்க் காண்டம் 9.57
(காவிரி கடலுடன் கலக்கும் சங்கமத்துறை)
44.காவிரி வாயில் கடைமுகம் கழிந்து – இளங்கோ அடிகள், சிலப்பதிகாரம், புகார்க் காண்டம் 10.33
(காவிரிக்கரையின் சங்கமத்துறை வாயிலை நீங்கி )
45.குட திசை கொண்டு கொழும் புனல் காவிரி- இளங்கோ அடிகள், சிலப்பதிகாரம், புகார்க் காண்டம் 10.34
(மேற்குத்திசை செல்லும் நீர்வளமான காவிரி)
46.காவிரி புது நீர் கடு வரல் வாய்த்தலை – இளங்கோ அடிகள், சிலப்பதிகாரம், புகார்க் காண்டம் 10.108
(காவிரியின் புதுநீர் விரைவாக வரும் வாய்க்காலின் தலைமை மதகு)
47.பரப்பு நீர் காவிரி பாவை-தன் புதல்வர் – இளங்கோ அடிகள், சிலப்பதிகாரம், புகார்க் காண்டம் 10.148
(நீர் பரந்த காவிரிப்பாவையின் புதல்வராகிய வேளாளர்)
48.கார் அணி பூம் பொழில் காவிரி பேர் யாற்று – இளங்கோ அடிகள், சிலப்பதிகாரம், புகார்க் காண்டம் 10.214
(முகில்கள்(மேகங்கள்) அணிசெய்யும் மலர் நிறைந்த சோலைகளை யுடைய காவிரிப்பேராறு)
49.தெய்வக் காவிரி தீது தீர் சிறப்பும் – இளங்கோ அடிகள், சிலப்பதிகாரம், புகார்க் காண்டம் 10.256
(துன்பத்தைத் தேய்க்கும் தன்மையுடைய காவிரியின் குற்றமற்ற சிறப்பும்)
50.விரி திரை காவிரி வியன் பெரும் துருத்தி – இளங்கோ அடிகள், சிலப்பதிகாரம், மதுரைக் காண்டம் 1.39
(விரிந்த அலைகளையுடைய மிகப்பெரிய காவிரியாற்றின் இடைக்குறைப்பகுதியில்)
(தொடரும்)
நன்றி : http://tamilconcordance.in/concordance_list-B.html
– இலக்குவனார் திருவள்ளுவன்
No comments:
Post a Comment