(வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 101-110 தொடர்ச்சி)

வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 111-120 (குறள்நெறி)
  1. துன்பத்துள் துணையாவோர் நட்பை இழக்காதே!
  2. கண்ணீர் துடைத்தவர் நட்பைக் காலமெல்லாம் போற்றுக!
  3.  நன்றி மறக்காதே! நன்றல்லதை அன்றே மற!
  4. பிறர் செய்யும் துன்பத்தை (அவர் முன்பு செய்த நன்மையை நினைத்து)  மறந்து போ!
  5. எந்நன்றி கொன்றாலும் செய்ந்நன்றி கொல்லாதே!
  6. நடுவுநிலைமையை அனைவரிடமும் காட்டு!
  7. நடுவுநிலை உணர்வுடன் செல்வம் ஈட்டு!
  8. நடுவுநிலையின்றி வருவது ஆக்கமாயினும் அன்றே ஒழி!
  9.  விட்டுச் செல்லும் பெயர் மூலம் தக்கவன் எனக் காட்டு!
  10. நடுவுநிலை தவறாத நெஞ்சத்தை அணியாகக் கொள்!
    (தொடரும்)
    இலக்குவனார் திருவள்ளுவன்
[காண்க : வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 121-130]