அகரமுதல
(வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 121-130 தொடர்ச்சி)
வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 131-140
(குறள்நெறி)
- (செல்வர்க்கே செல்வமான) பணிவைக் கடைப்பிடி!
- (ஆமைபோல்) ஐம்பொறி அடக்கு!
- நாவைக் காக்காது துன்பத்தைச் சேர்த்துக் கொள்ளாதே!
- (நன்றெல்லாம் நீக்கும்) தீச்சொல் ஒன்றும் சொல்லாதே!
- நாவினால் பிறரைச் சுடாதே!
- (அறவாழ்வு தேடி வர,) அடக்கமுடன் வாழ்!
- நல்லொழுக்கத்தை உயிரினும் மேலாய் மதி!
- ஒழுக்கத்தை எல்லா இடத்திலும் துணை வரச் செய்!
- ஒழுக்கமுடைமையை உயர் குடிமையாகக் கருது!
- ஒழுக்கம் தவறாதே!
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
[காண்க : வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 141-150]
140இல் ஒழுக்கம் குன்றாதே! எனத் திருத்திப் படிக்கவும்
ReplyDelete