வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 161-170
(குறள்நெறி)
- நற்குணம் நீங்காமல் காத்திடப் பொறுமையைக் காத்திடு!.
- பொறுத்தவரைப் பொன்போல் போற்று!
- ஒறுத்தால் ஒருநாள் இன்பம்; பொறுத்து என்றும் புகழ் பெறு!
- பிறர் திறனல்ல செய்யினும் நீ அவர்க்கு அறனல்ல செய்யாதே!
- செருக்கினை வெல்ல பொறு!
- துறவியினும் தூயராகத் தீச்சொல் தாங்கு!
- தீச்சொல் பொறு!
- அழுக்காறு இன்மையை ஒழுக்காறு ஆகக் கொள்!
- இணையற்று வாழ அழுக்காறு இன்றி இரு!
- அறன் ஆக்கம் வேண்டுமெனின், பிறர் ஆக்கம் கண்டு பொறாமைப்படாதே!
165இல் வெல்ல பொறு! என்பதற்கு மாற்றாக வெல்வதற்குப் பொறு எனத் திருத்திப் படிக்கவும்.
ReplyDelete