அகரமுதல
(வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 141-150 தொடர்ச்சி)
வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 151-160
(குறள்நெறி)
- நம்பியவர் மனைவியை நாடாதே!
- பிறன்மனை புகுந்து சிறியோன் ஆகாதே!
- பிறர் மனைவியை நாடாதே!
- பிறர் மனைவியை விரும்பாதே!
- அறவாழ்வு வேண்டுமெனில், பிறர்மனைவியை விரும்பாதிரு!
- (அறத்தைத் தழுவப்,) பிறர் மனைவியைத் தழுவாதே!
- பிறர் மனைவியை விரும்பா அறம் புரி!
- தோண்டுநரைத் தாங்கும் நிலம்போல் இகழ்வாரைத் தாங்கு!
- பிறர் தீங்கைப் பொறுத்தலினும் மற!
- அறிவின்றித் தீங்கிழைப்போரைப் பொறு!
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
இலக்குவனார் திருவள்ளுவன்
[காண்க : வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 161-170]
No comments:
Post a Comment