வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 171-180
(குறள்நெறி)
- பொறாமையால் அல்லவை செய்யாதே!
- (துன்பம் தரும்) அழுக்காறு வேண்டா உனக்கு!
- சுற்றம் கெட வேண்டுமாயின் பிறருக்குக் கொடுப்பதைத் தடு!
- செல்வம் சேர வேண்டாமெனில், பிறர் செல்வம் கண்டு பொறாமை கொள்!
- நடுவுநிலை தவற விரும்பாவிடில், பிறர் பொருள் விரும்பாதே!
- பொறாமையாளனின் செல்வமும் பொறாமையற்றவனின் கேடும் மாறும்.
- அழிவினுள் தள்ளும் அழுக்காறு கொள்ளாதே!
- (உயர வேண்டுமெனில்,) பொறாமை கொள்ளாதே!
- உன் குடி அழிய வேண்டுமாயின், பிறர் பொருள் விரும்பு!
- பிறர் பொருள் பயன் விரும்பிப் பழிச்செயல் புரியாதே!
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
[காண்க : வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 181-190]
No comments:
Post a Comment