அகரமுதல
(வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 171-180 தொடர்ச்சி)
வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 181-190
(குறள்நெறி)
- பிறர் பொருளை விரும்பி அறமற்ற செயல் புரியாதே!
- உன்னிடம் இல்லை என்பதற்காகப் பிறர் பொருளை விரும்பாதே!
- பிறர் பொருள் விரும்பி வெறிச்செயல் செய்யாதே!
- அருள்வழி நின்றாலும் பிறர் பொருள் விரும்பாதே!
- பிறர் பொருளைக் கொண்டு செல்வம் சேர்க்காதே!
- செல்வம் குறைய வேண்டாமெனில் பிறர் பொருளை விரும்பாதே!
- (செல்வம் சேரப்) பிறர் பொருள் விரும்பா அறவாணராய் வாழ்!
- அழிவு வரப் பிறர் பொருள் விரும்பு! வெற்றிக்குப்பிறர் பொருள் விரும்பாதே!
- முன்னால் இழித்துச் சொன்னாலும் பின்னால் பழித்துச்சொல்லாதே!
- அறம்கூறும் நெஞ்சத்தான் எனில் புறஞ் சொல்லாதே!
No comments:
Post a Comment