Wednesday, September 12, 2012

இலை வகைகள் - kind of Leaves - ilai vakaikal


இலை வகைகள்


உயிரிகள் வாழத் தேவையானவை உயிர்ப்பும்(மூச்சும்) உணவும்தான். அவ்வகையில் தாவரங்கள் எனப்பெறும் நிலைத்திணைகளுக்குத் தேவையான உயிர்ப்பையும் உணவு உட்கொள்ளுதலையும் செய்வன இலைகளே. இலைகள் அவற்றின் வடிவ அடிப்படையிலும் பரப்பின் தன்மை அடிப்படையிலும் முனை அல்லது ஓரப்பகுதி அல்லது விளிம்பு அமைந்துள்ள தன்மையின் அடிப்படையிலும்  வகைப்படுத்தப்பட்டுள்ளன. நீர், தாது உப்புகள் முதலானவற்றைக் கொண்டு செல்வதற்கும் அலகில் உருவாக்கும் உணவை எடுத்துச் செல்வதற்கும் உதவுவன நரம்புகள். நரம்புகள் அமைந்துள்ள முறை நரம்பமைவு (Venation) எனப்படுகின்றது. ஒளிச்சேர்க்கை முதலான பணிகள் பற்றியும் பொதுவான இலை அமைப்புகள் பற்றியும் பாட நூல்களில் உள்ளன. எனினும் முழுமையாக அளவில் இலை வடிவம், நரம்பமைவு முதலானவை பற்றிய செய்திகள் இல்லை. இங்கு நாம் அவற்றைப் பார்ப்போம். (இவற்றுள் சிலவற்றை இலை அறிவியல் கட்டுரையில் பார்த்தோம்.)  அனைத்திற்குமான கலைச்சொற்கள் தமிழில் தரப்படுவதால், தன்னிலை விளக்கமாக அவை அமைந்து விரிவு தேவைப்படவில்லை. இவற்றுள் ஆங்கிலக் கலைச்சொற்களின் சாய் கோட்டிற்கு அடுத்துக் குறிக்கப்பெறுவன பன்மைச் சொற்களாகும்.

  1. அங்கை (வடிவ)இலை(Palmate leaf) ( உள்ளங்கை வடிவம்போல் அமைந்தஇலை)
  2. அம்பு(வடிவ) இலை (Sagittate leaf/ sagittata leaf)
  3. அரம்பப்பல் விளிம்பு (Serrate margin)
  4. அரிவாள்(வடிவ) இலை(Falcate leaf)
  5. அரும்பு(ப்பரப்பு)(Papillate, or papillose surface)
  6. அலை விளிம்பு (Repand margin)
  7. மேடுபள்ள விளிம்பு(Undulate margin)
  8. அவரை விதை (வடிவ)இலை (Reniform leaf/ reniformis) (ஆங்கிலத்தில சிறுநீரக வடிவ இலை என்னும் பொருளில் குறிப்பிடப்பட்டாலும் தமிழில் அவரைவிதை வடிவ இலை என்பதுதான் ஏற்றதாக இருக்கும்.)
  9. ஆப்பு(வடிவ) இலை Cuneate leaf/Cuneata)
  10. இணைவக (வடிவ) இலை (Rhomboid leaf/rhomboidalis)
  11. இதய (வடிவ)இலை (Cordate leaf/ cordata)
  12. இயல்பிலை (Simple leaf )
  13. இருசிற்றிலை(Bifoliate leaf)
  14. இறகு (வடிவ)இலை (Pinnate leaf/ pinnata leaf)
  15. இறகுக்கூம்பு விளிம்பு (Pinnatifid and pinnatipartite leaf)
  16. இறகுவெட்டு இலை (Pinnatisect /pinnatifida leaf)
  17. ஈட்டி(வடிவ) இலை (Hastate leaf /hastata)
  18. ஈட்டித்தலை (வடிவ) இலை (Lanceolate/ lanceolata, lanciyolate leaf)
  19. ஈரரம்பப்பல் (Biserrate)
  20. ஈரிறகிலை (ஈரிறகுவடிவமுனை)   (Bipinnate leaf )
  21. உளிவாய் விளிம்பு  (Runcinate margin)
  22. ஊசி இலை (Acicular leaf /acicularis)
  23. ஒற்றை இலை (Unifoliate leaf/ unifoliata)
  24. ஓழுங்கிலி (விளிம்பு இலை) (Laciniate leaf)
  25. கரட்டு(ப் பரப்பு)
  26. கரண்டி (வடிவ) இலை (Spatulate leaf , spathulate leaf /spathulata)
  27. குவிநுனி(இலை) (Emarginate leaf)
  28. குற்றிழை(குறுமுடியிழைப்பரப்பு)(Pubescent surface)
  29. இதய(வடிவ) குறுமுனை இலை (Obcordate leaf /obcordata)
  30. கூட்டிலை (Compound leaf)
  31. கூம்பு விளிம்பு(Bit margin)
  32. கூர் நுனி (இலை) (Acute leaf)
  33. கூர்முனை (இலை) (Pungent leaf)
  34. கூரிலி(இலை)  (Subobtuse leaf/subobtusa)
  35. கேடய(வடிவ)இலை (Peltate leaf /peltata)
  36. கொக்கி(வடிவ) இலை (Falcate leaf /falcata)
  37. கொம்பு(வடிவ) இலை (Cuspidate leaf)
  38. கோள(வடிவ)இலை(Elliptic leaf/ elliptica)
  39. சமச்சீரிலி (இலை) (Asymmetrical leaf)
  40. சரடு(சரட்டிலை) (Filiform leaf /filiformis)
  41. சாய்(வடிவ) இலை(Oblique leaf)
  42. சாறு நயம்(Fleshy texature)
  43. சுரப்பி விளிம்பு(Glandular margin)
  44. சுரப்பி(ப் பரப்பு) (Glandular surface)
  45. சுருள் மடிப்பு(ப் பரப்பு)(Rugose surface)
  46. சுருள்நுனி (Cirrhose)
  47. சுற்றுப்புல் விளிம்பு(Grinate margin)
  48. செதில் (பரப்பு)(Scurfy surface)
  49. தட்டை (இலை) (Laminar leaf)
  50. தடித்த நுனி (இலை) (Retuse leaf)
  51. தண்டு சூழ்இலை (Perfoliate leaf)
  52. தண்டு முனை இலை (Cauline leaf)
  53. தலைகீழ் (வடிவ) இலை(Oblanceolate/oblanceolata)
  54. தலைகீழ்முட்டை(வடிவ) இலை(Obovate /obovata leaf)
  55. துண்டிப்பு முகடு (முகட்டிலை) (Truncate leaf /truncata)
  56. துளையூசி (இலை) (Subulate leaf /subulata)
  57. துளைவடிவ இலை (Perforate leaf/perforata)
  58. தூள்(பரப்பு)(Farinose surface)
  59. தோரண விளிம்பு  (Fimbriate margin)
  60. தோல் நயம் (koriyashi texature)
  61. நாற்சிற்றிலை(Tetrafoliate leaf)
  62. நாற்சிறகிலை (Tetrapinnate leaf)
  63. நீள் வட்ட வடிவ இலை(Elliptic /elliptica)
  64. நீள்கூர் இலை (Acuminate leaf)
  65. நீள்சதுர வடிவ இலை (Oblong leaf /oblongus)
  66. நீள்வடிவஇலை( Linear/linearis leaf)
  67. நுண்பல் விளிம்பு (Serrulate margin)
  68. நுனிப்புல் விளிம்பு(serate margin)
  69. நெகிழ் நயம் (Herbatirus texature)
  70. நெட்டிழை(நெடுமுடியிழைப் பரப்பு)(Villous surface)
  71. நெய்ப்பு(ப் பரப்பு)(Viscid, or viscous surface)
  72. நெளி விளிம்பு (Sinuate margin)
  73. நெளிவு(ப் பரப்பு)/கரணை(ப் பரப்பு)(Verrucose surface)
  74. பகுதிப்பிரி விளிம்பு(Patide margin)
  75. பசை(ப் பரப்பு) (Glutinous surface)
  76. பல் விளிம்பு (Denticulate, Dentate)
  77. பல சிற்றிலை(Mulit foliate leaf)
  78. பலகணி(வடிவ) இலை (Fenestrate leaf /fenestrata)
  79. பளபளப்பு(ப் பரப்பு)(Glabrous surface)
  80. பன்முனை  இலை(Lobed leaf /lobata) விளிம்பு  பிளவுபட்டது போல் தோன்றுவதால் பிளவுபட்ட இலை என்னும் பொருளில் ஆங்கிலத்தில் குறிக்கப்பட்டிருப்பினும் பல முனையாகக் கருதிப் பன்முனை என்பதுதான் சரியாக இருக்கும்.
  81. பாதவடிவ இலை(Palmate leaf /palmata; Pedate leaf /pedata)
  82. புள்ளி(ப் பரப்பு)(Punctate surface)
  83. மயிரிழை விளிம்பு(Syliyate margin)
  84. முக்கூட்டிலை (Trifoliate / trifoliolate,or ternate leaf)
  85. முக்கோணவடிவ இலை (Deltoid /deltoidea or deltate leaf)
  86. முச்சிற்றிலை(Trifoliate leaf)
  87. முட் பரப்பு (Spiny surface)
  88. முட்டைவடிவ இலை( Ovate/ovata leaf)
  89. முடி விளிம்பு  (Ciliate margin)
  90. முடிஅடர் பரப்பு (Floccose surface)
  91. முடிச்சு(ப் பரப்பு) (Tuberculate surface)
  92. முடிபடர் பரப்பு(Hirsute surface)
  93. முழு  விளிம்பு(Entire margin)
  94. முழு இழை(முழுமுடியிழைப் பரப்பு) (Tomentose surface)
  95. முழுப்பிரி விளிம்பு(Sect margin)
  96. முள் விளிம்பு(Spine margin, Spinous)
  97. முனைமழுங்கிலை (Truncate leaf)
  98. மூவிறகுக்கூட்டிலை, முவ்விறகிலை(Tripinnate leaf)
  99. மையநரம்பு நீள் நுனி/ முள்முனை நுனி (Mucronate leaf)
  100. வட்ட (வடிவ) இலை (Orbicular /orbicularis leaf)
  101. வழுவழு(ப் பரப்பு) (Glabrous surface)
  102. வளைய(வடிவ) இலை ( Peltate /peltata surface)
  103. வளைவுப்பல் விளிம்பு (Crenate margin)
  104. வாள்முனை இலை (Ensiform leaf )
  105. விசிறி வடிவ இலை (Flabellate /flabellata leaf)
  106. விதை நயம்(Crushtarius texature)
  107. விரல்வடிவ இலை (Digitate /digitata leaf)
  108. விரிநுனி இலை (Obtuse/obtusus leaf)
  109. விறை இழை(விறைமுடியிழைப் பரப்பு)
  110. விறைப்புமுனை( Aristate/aristata)
  111. வெளிப்புல் விளிம்பு(Dendent margin)
  112. வெளிர்படிவு(ப் பரப்பு)(Glaucous surface)
  113. வேல்வடிவ இலை (Dart shaped diphonem leaf)

 ஆங்கிலத்தில் வழக்கத்தில் லீப்/leaf மார்சின்/margin முதலானவை சேர்த்துச் சொல்லப்படுவதில்லை. தமிழிலும் பயன்பாடு பெருகப் பெருகச் சுருக்கமாகக் கூறினால் போதும் என்ற நிலை வரவேண்டும். தொடர்பயன்பாடு இருப்பின், இடத்திற்கேற்ப நாம் பொருள் புரிந்து கொள்ள முடியும்.  எனவே, தமிழ்க்கலைச்சொற்களையே பயன்படுத்திப் படைப்புகள் வரவேண்டும்.
அருந்தமிழிலேயே  அறிவியலை முழுமையாகப் படைக்கும் காலம் விரைவில் வர வேண்டும்.
 


No comments:

Post a Comment

Followers

Blog Archive