தெரிந்து கொள்வோம் : கருவியம் – hardware
2/2
ware என்பது பொருள் அல்லது பண்டம் என்பதைக் குறிக்கும் என்பது உண்மைதான்.
எனவே, ஆட்சியியலில்
warehouse – கிடங்கு, பொருளறை, பண்டக மனை என்றும்
வேளாணியலில் பொருளைத தேக்கி அல்லது சேமித்து வைக்குமிடம் என்னும் பொருளில் warehouse – தேக்ககம், கிட்டங்கி
வங்கியியலில் காப்பகம், பண்டகச்சாலை என்றும்
பொறியியலிலும் மனையியலிலும் glassware – கண்ணாடிப் பொருட்கள்
என்றும் குறிக்கின்றனர்.
மேசையில் வைக்கப்படும் பொருள்களைக்
குறிக்கும் table-ware -. மேசைத் தட்டுமுட்டுக் கலம். எனச்
சொல்லப்படுகிறது.இதனைச் சுருக்கமாக மேசையணிகள் அல்லது மேசைக்கலன்கள்
எனலாம்.
sea-ware – கடற்பாசி உரம் எனப்பெறுகிறது. இங்கே கடற்பொருள் எனப்பெறுவதில்லை.
ware என்பது பல இடங்களில் மண்பாண்டங்களைக் குறிக்கும்.
எனவே, பொறியியலில்
earthenware மண்கலம்
என்றும்
கல்வெட்டியலில்
brown slipped ware பழுப்புநிற மட்கலன்
grey ware சாம்பல்நிற மட்கலன்
northern black polished ware வடக்கத்திய பளபளப்பான மட்கலன்
red slipped ware செம்பூச்சு மட்கலன்
rouletted ware ரோமானிய பானை வகை
coarse red ware பருவட்டான சிவப்பு மட்கலம்
black and red ware கறுப்பு சிவப்பு மட்பாண்டம்
எனவும் குறிக்கப்பெறுகின்றன.
ware என்பது விற்பனைப்பொருள் என்றும் செய்கலம் என்றும் சொலலப்படும்.
எனவே மனையியலில்
flatware – தட்டைக்கலன்கள் எனப் பெறுகின்றது.
சுடப்படாத பச்சை மண்ணால் ஆன மட்கலனை
greenware – சுடப்படா மண்பொருட்கள் என்கின்றனர்.
stoneware – கற்கலன் என்பன பொருள் என்றும் கலன் என்றும் ware குறிக்கின்றது.
மனையியலில்
cogware – கரட்டுக் கம்பளித் துணிவகை
என்கின்றனர். குறுந்துணி என்றும்கூறலாம். ஆனால் small wares – குறுந்துணி
என்பதால், இதனை இவ்வாறு குறிப்பிடுகின்றனர். small ware – சிறு துணி
எனலாம்.
ware- பாத்திரங்கள் என்னும் பொருளில் மனையியலில்
service ware – பரிமாறல் பாத்திரங்கள்
warewashing – பாத்திரம் கழுவல்
என்றும் சொல்லப்பெறுகின்றன.
இவ்வாறு ware என்பது பொருளைக் குறித்தாலும் இடத்திற்கேற்றவாறு என்ன பொருள் என்பதைக் குறிக்கும் வகையிலும் குறிக்கப்பெறுகின்றது.
இவற்றின் அடிப்படையில் நாம் ஆர்டுவேர்/hardward குறித்துக்காணவேண்டும்.
Hardwares . வன்மாழைகள், வன்மாழையகம், வன்சரக்கு, இரும்புக்கடை என்பன இரும்புப்பொருள் வழங்குமிடங்களில் மட்டுமே பொருந்தும். கணிப்பொறியியலில் பொருந்தாது
தகவல்நுட்பவியலில்
hardwired – நிலையிணைப்பு
hard clip area – தாளின் வரைபரப்பு
hard configuration – நிலை உள்ளமைவு
என்பவற்றின்மூலம் hard(ware) என்பது வன்(பொருள்) என்று கையாளப் பெறவில்லை என்பதையும் காணலாம்.
hard copy என்றால் கடினப்படி என்பது தவறல்லவா? தாள்படி அல்லது அச்சுப்படி என்றுதானே பொருள்.
hard error என்றால் கருவிப்பிழை என்றும்
hard failure என்றால் கருவிப்பழுது என்றும் தகவல்நுட்பவியலில்
குறிக்கின்றனர். இங்கே கடினப்பிழை என்றோ கடினப்பழுது என்றோ குறிக்கவில்லை.
இதுதான் சரியானது. hard என்பது கருவியையும் குறிக்கிறது என்பதற்கு இதுவே சான்றாகும்.
hardwareஎன்பதற்கு ஆங்கில அகராதிகளில் பின்வரும் பொருள்களும் குறிக்கப்பெற்றுள்ளன.
1.metalware as tools, locks, hinges, or cutlery.
- the mechanical equipment
- Fixtures, equipment, tools and devices
இவையெல்லாம் கருவி என்னும் பொருள் சார்ந்தவையே.
Computer hardware என்னும்பொழுதது இரும்புப்பொருள்கள் அல்லது வன்மையானபொருள்கள் என்று சொல்லாமல், கணிணியின் உறுப்புப்பொருள்களாகத்தான் குறிக்கப்பெறுகின்றன. (Computer hardware is the collection of physical components that constitute a computer system. )
இயற்பியலில் hardware – கருவியம் என்பதை ஏற்றுப் பயன்படுத்துகின்றனர். தமிழ்ப்பல்கலைக்கழக அகராதியில் இவ்வாறே இடம் பெற்றுள்ளது.
மேலே விரிவாகக் குறிப்பிட்டதன் காரணம் சொற்பொருள் தன்மையைப் புரிந்துகொள்ளாமல் தவறான சொல்லைப் பற்றிக்கொண்டு வீண்பிடிவாதம் பிடிக்கின்றனர் சிலர். அவர்கள், புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகத்தான்.
தகவல்நுட்ப வல்லுநர்கள், தங்களின் தமிழார்வத்தைத் தமிழ்ப்புலமையின் அடையாளமாகக் கருதிக்கொண்டு, பொருத்தமான தமிழ்ச்சொற்களைப் புறக்கணிக்கும் போக்கு நிற்க வேண்டும். பொருத்தமில்லாத நேர் பொருள்சொற்களுக்கு முற்றுப்புள்ளி இட வேண்டும்.. எனவேதான் விரிவாக விளக்க வேண்டி வந்தது.
hard ware என்னும் பொழுது கணிணியியலில் –
கருவிக்கலனைத்தான் குறிக்கின்றது எனப் புரிந்து கொள்ளலாம். கலன் என்றால்
பாத்திரம் எனப் புரிந்து கொள்ள நேரிடலாம். எனவே நாம் ஆர்டுவேர்/ hard ware- கருவியம் என்றால் பொருத்தமாகவும்அழகாகவும் இருக்கும்.
கருவியம் தொடர்பான சில சொற்களைப் பார்ப்போம்.
கருவிய அமைவொழுங்கு(வடிவமைப்பு) | hardware configuration |
கருவிய நுட்பவியல் | hardware technology |
கருவிய மீட்டமைப்பு | hardware reset |
கருவிய முரண்பாடு | hardware conflict |
கருவிய வல்லுநர் | hardware expert |
கருவிய வளங்கள் | hardware resources |
கருவிய விசை | hardware key |
கருவிய விவரிப்பு விளம்பி(மொழி) | hardware description language |
கருவியக்கடை | hardware shop |
கருவியக்கல்வி | hardware education |
கருவியக்குவிப்பு | hardware dump |
கருவியச் சார்வு | hardware dependent |
கருவியச்சான்றிதழ் | certificate in hardware |
கருவியச்சிறப்பறிவாளர் | hardware specialist |
கருவியப் பட்டயம் | diploma in hardware |
கருவியப் பாய்வுக் கட்டுப்பாடு | hardware flow control |
கருவியப் பொறியாளர், கருவியப்பொறிஞர் | hardware engineer |
கருவியப்படிப்பித்தல் | hardware teaching |
கருவியப்பாடமுறைமை | hardware course |
புதிய கருவியைத்தை இணை | add new hardware |
வரைகலை உள்ளீட்டுக் கருவியம் | graphic input hardware |
வரைகலை வெளியீட்டுக் கருவியம் | graphic output hardware |
hardware-வன்பொருள், என்று
சொல்லிக்கொண்டிராமல் கருவியம் என்று நாம் பயன்படுத்தினால் எளிதாகவும்
புரிந்து கொள்ள வாய்ப்பாகவும் இருக்கும்.
கணிணியியலில் வன்பொருள் என்பதைப் புறக்கணிப்போம்! கருவியத்தைப் பயன்படுத்துவோம்!
– இலக்குவனார் திருவள்ளுவன்
ஆசிரியர், அகரமுதல – பன்னாட்டு மின்னிதழ்
தமிழ் இணைய மாநாட்டுக் கட்டுரை, 2017, மலேசியா
No comments:
Post a Comment