வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் : 21-30

(குறள்நெறி)

  1. ஒழுக்கத்தார் பெருமையே உயர்ந்தது என்று போற்று!
  2. துறந்தார் பெருமையை அளவிடுவது இறந்தாரை எண்ணுவது போன்றது என அறி!
  3. அறம்புரிவார் பெருமை அனைத்திலும் பெருமையுடைத்து என உணர்!
  4. அறிவு வலிமையால் ஐம்புலன் காத்திடு!
  5. ஐம்புலன் அடக்கி ஆற்றலராக விளங்கு!
  6. அரியன செய்து பெரியாராய்த் திகழ்!
  7. ஐவகை உணர்வும் அறி.!
  8. நல்லுரை மூலம்  நிறைவுடையார் பெருமையைப் பெறு! 
  9. குணக்குன்றோர் சீற்றம் நொடிப்பொழுதும் தங்காது என உணர்!
  10. “அந்தணர் என்போர் அறவோரே! ஆரியச்சாதியினர் அல்லர்” என உணர்!
 (தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்