அகரமுதல
(வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 31-40 தொடர்ச்சி)
வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 41-50
(குறள்நெறி)
- நாளை வீணாக்காமல் நன்றாக்கி வாணாள் காக்கும் அணையாக்கு!
- அற வழியில் உண்மை இன்பம் அடை!
- அறம் செய்! பழிச்செயல் விடு!
- சார்ந்தோர்க்குத் துணையாக இரு!
- துறந்தார், துய்க்க இயலார், காப்பிலார்க்குத் துணை நில்!
- பிறருடன் உன்னையும் காத்திடு!
- பழிக்கு அஞ்சிப் பகுத்துண்டு வாழ்!
- இல்வாழ்வின் பண்பும் பயனுமான அன்பையும் அறனையும் கடைப்பிடி!
- இல்வாழ்வே அறவாழ்வு, பிற வாழ்வில் ஒன்றுமில்லை. என உணர்!
- முயற்சியுடையாருள் தலைசிறந்து விளங்கு!இலக்குவனார்திருவள்ளுவன்
(தொடரும்)
இலக்குவனார்திருவள்ளுவ
No comments:
Post a Comment