வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 31-40

(குறள்நெறி)

  1. அற வழியில் சிறப்பும் செல்வமும் பெறு!
  2. அறத்தை ஆக்கமாகக் கருது! அதனை மறந்து கேடுஉறாதே!
  3. இயன்றவழியில் எல்லாம் அறம் செய்க!
  4. அறவாழ்விற்கு மனமாசின்றி இரு!
  5. அழுக்காறு அகற்றி அறவாழ்வு வாழ்!
  6. அவாவினை நீக்கி அறப்பாதையில் செல்!
  7. வெகுளியைப் போக்கி அறநெறியில் நில்!
  8. இன்னாச்சொல் அகற்றி அறமே போற்று!
  9. அறத்தினை அன்றன்றே ஆற்று!
10. பல்லக்கைச் சுமப்பவனையும் அதில் இருப்பவனையும் ஒப்பிட்டு அறவழி என்று சொல்லாதே!
(தொடரும்)
இலக்குவனார்திருவள்ளுவன்