வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம்
(குறள்நெறி)

  1. காதற் துணையை அடைந்து கடவுட் பெருமையை அடை!
  2. புகழ்மிகு துணையால் பெருமித நடை கொள்!
  3. இல்லறப் பெருமையே பொலிவுநன்மக்களே அழகு! என உணர்!
  4. நன்மக்கட்பேறே சிறந்த பேறு என அறி!
  5. எப்பருவத்திலும் துன்பங்கள் நெருங்காவண்ணம் பழியிலா மக்கள் பெறு!
  6. நம் மக்கள் நம் செல்வம். அவர் முயற்சியால் அவர் செல்வம் வரும் என அறி!
  7. நம் மக்கள் சிறு கையால் தரும் உணவை அமிழ்தினும் இனிதாய்ச் சுவை!
  8. மக்களைத் தீண்டி உடலுக்கும் சொற்கேட்டுச் செவிக்கும் இன்பம் பெறு!
  9. மழலைச்சொற் கேளாமல் குழலும் யாழும் இனிதெனாதே!
  10. மக்களை முற்பட்டவராக ஆக்கு!
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்