(நாலடி நல்கும் நன்னெறி :11.  நல்லன புரிந்து நற்கதி/நன்மை அடைவோம்! – தொடர்ச்சி)

அள்ளிக்கொள் வன்ன குறுமுகிழ வாயினும்

கள்ளிமேற் கைந்நீட்டார் சூடும்பூ அன்மையால்

செல்வம் பெரிதுடைய ராயினும் கீழ்களை

நள்ளார் அறிவுடை யார்

நாலடியார்  பொருட்பால் – இன்ப இயல் – நன்றியில் செல்வம் 262

அதிகாரத் தலைப்பு விளக்கம்: “நன்றியில் செல்வம்” என்றால், பிறருக்கு உதவாத, அல்லது பயனில்லாத செல்வம் என்று பொருள்.  ஒருவரிடம் எவ்வளவு செல்வம் இருந்தாலும், அதை அவர் தானும் துய்க்காமல், பிறருக்கும் பயனளிக்காமல் இருப்பின் அதனால் பயனில்லை. பிறருக்கு உதவாத  செல்வம் எந்தப்  பயனும் தராத வீண் செல்வமே. மருந்து மரம் எலலாவகையாலும் உதவுவதுபோல் செல்வம் எல்லா வகையிலும் பிறருக்குப் பயன்பெறவேண்டும். தனக்கும் பிறருக்கும் பயனற்ற செல்வத்தையே பயனில் செல்வம் என்கின்றனர். பயனில் செல்வமுடையோர் பயனற்ற மக்களாகக் கருதப்படுகின்றனர்.

கள்ளிச் செடியில் சிறு அரும்புகள் அள்ளிக்கொள்வதுபோல் நெஞ்சை அள்ளும் அழகுடன் மிகுதியான பூக்கள் பூத்திருக்கின்றனஎன்றாலும் அவை சூடிக்கொள்வதற்கு ஏற்றவை அல்லஎனவேகள்ளியில் பூத்த மலர்களைப் பறிக்க யாரும் முன் வரமாட்டார்கள்அதேபோல் கீழ் மக்களிடம் செல்வம் எவ்வளவுதான் குவிந்திருந்தாலும் அறிவுடையார் அக்கீழ் மக்களை நாடவோ அச்செல்வத்தை அடையவோ விரும்ப மாட்டார்கள்.

கள்ளிச்செடி பலவகையானதுஎனினும் எல்லாவற்றின் பூக்களும் அழகானவைபூக்கள் அழகாக உள்ளன என்பதற்காக இதனைப் பறிக்க முயன்று கைகளில் முள் குத்திக் கொள்ள மாட்டார்கள்பார்ப்பதற்கு அழகாகப் பூக்கள் இருந்தாலும் இவற்றால் ஏதும் பயனில்லைஎனவேதான்தலையில் சூடிக்கொள்ளவும் மாட்டார்கள்.

நாலடியாருக்கு முன்னரே திருவள்ளுவர் ‘நன்றியில் செல்வம்’ என ஓர் அதிகாரமே திருக்குறளில் வைத்துள்ளார்இதன்படி நன்றியில் செல்வம் உடையவரை அணுகக் கூடாது.

செல்வம் ஒருவரிடம் குவிந்திருக்கிறது என்பதற்காக அவரிடம் எப்பொருளையும் கேட்டுப் பெறலாம் என்று எண்ணக் கூடாதுதீய வழியில் செல்வம் பெற்றதை அறிந்தும் அச்செல்வத்தில் இருந்து பயன்பெற எண்ணுதல் தீமையையே பெறுபவருக்கும் தரும்எனவேதான்நல்லறிவுடையோர் நன்றியில் செல்வத்தை நாடமாட்டார்கள்.

“அள்ளிக்கொள் வன்ன” என்று சொல்வதன் மூலம் வெளிக்கவர்ச்சிக்கு மயங்குவதில் பயனில்லைபுறத்தோற்றத்தில் ஏமாந்து தீய படுகுழியில் வீழ்வதால் எனன பயன்எனவேபுறத்தோற்றத்தில் நல்லறிவுடையோர் மயங்க மாட்டார்கள் என்பதையும் இப்பாடல் உணர்த்துகிறது.

“பணம்படைத்தவரின் சொல்லைக் கேட்டு

அதுக்குத் தாளம் போட்டுபலர்

பல்லிளித்துப் பாடிடுவார் பின் பாட்டு”

என்கிறார் மருதகாசி ‘அலிபாபாவும் 40 திருடர்களும்’ திரைப்படத்தில்

இவ்வாறு வாழாதவரே நல்வாழ்வு வாழ்வோர் ஆவார்.

‘அந்தமான் காதலி’ திரைப்படத்தில் கண்ணதாசன் பாடல் ஒன்று,

பணம் என்னடா பணம் பணம்

குணம்தானடா நிரந்தரம்

என்கிறதுஇதை உணராமல் குணங்கெட்டவரின் பணத்தை நாடுவது தவறு.

 நாம் நல்ல வழியில்நடந்துவிட்டுப் பொல்லா வழியில் நடப்பவர் செல்வத்தை நாடுவது தவறாகும்அது நாமும் பொல்லா வழியில் நடப்பதற்கு ஒப்பாகும்எனவே,

நன்றியில் செல்வத்தை விரும்பாதீர்!