(சட்டச் சொற்கள் விளக்கம் 911 – 915 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி)
சட்டச் சொற்கள் விளக்கம் 916 – 920
916. assistance, need; need assistance | உதவி தேவை தேவை உதவி பணியில் அல்லது ஒரு சூழலில் உதவி அல்லது ஆதரவு தேவை எனக் கேட்பதையும் அவ்வாறு உதவி தேவையா எனக் கேட்பதையும் குறிக்கிறது. இவ்வாறு உதவி வேண்டுமா எனக் கேட்பது ஒரு கண்ணியமான வழி. தனியர், குழு, மக்கள், நாடுகள் முதலியன ஒரு கடினமான சூழ்நிலையை எதிர்நோக்கும்போது அவர்களுக்கு வழங்கப்படும் பணம் அல்லது வளங்கள் அல்லது வேறு வகை உதவிகள். சட்டத்தில் “உதவி தேவை” என்பது ஒருவருக்குத் தேவைப்படும் சட்ட உதவி அல்லது வழக்கறிஞரின் ஆதரவைக் குறிக்கிறது. ஒருவர் அல்லது ஓரமைப்பு எதிர்கொள்ளும் சட்டச் சிக்கல் தொடர்பாக ஆலோசனை வழங்கல், வழிகாட்டுதல், சார்பாளராக/வழக்குரைஞராக நேர் நிற்றல் முதலியவற்றையும் குறிக்கிறது. |
917. assistance, offer; offer assistance | உதவி நல்கல் உதவி அளிப்பு உதவ முன்வரல் தர முன்வரும் உதவியைப் பெற விருப்பமா? பயன்படுத்த முன்வருகிறாரா என அறிந்து கொள்ளும் நோக்குடன் உதவி அளிக்க வரல். வழக்குகளில் இவ்வாறு சட்ட உதவி தர முன்வருவதையும் குறிக்கிறது. தனியருக்கோ பலருக்கோ குழுவினருக்கோ அமைப்பிற்கோ இவ்வாறு உதவ முன்வருவதையும் குறிக்கிறது. |
918. assistance, outside; outside assistance | புற உதவி வெளிப்புற உதவி ஒரு குழுவிற்கு அக்குழுவிலிருந்து வெளியே உள்ள பயிற்சியாளர் அல்லது பெற்றோர் அல்லது அகவை வந்தவர் அல்லது சிறுவரிடமிருந்து பெறும் உதவியைக் குறிக்கிறது. நீதி மன்றத்தில் சட்ட அறிவுரை தொடர்பாக அரசு வழக்குரைஞர், நீதிமன்றப்பணியாளர்கள் அல்லாத புற நிலையினரிடம் பெறும் உதவி. |
919. assistance, practical; practical assistance | செய்முறை உதவி செயல்முறை உதவி நடைமுறை உதவி நடைமுறை உதவி என்பது உலகச் சிக்கல்களை அல்லது இடுபணிகளைக் கையாளும் உதவியாகும். வேலைகளில் உதவுதல், அறிவுரை வழங்குதல் அல்லது வளங்களைப் பகிர்தல் போன்றவை இதில் அடங்கும். உதவுவதாகப் பேச்சளவில் நிறுத்திக் கொள்ளாமல் செயலளவில் உதவுவது. நீதிமன்றத்தில் உதவி தொடர்பான அறிவுரைகள் வழங்குவதோடு அல்லாமல் உள்ளபடியான உதவிகைள வழங்குவது. |
920. assistance; provide; provide assistance | தருவித்து உதவல் வேலையை அல்லது இடுபணியை, அல்லது அவற்றில் ஒரு பகுதியைச் செய்வதற்கு ஏற்பாடு செய்து உதவுதல். சட்ட உதவி கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்து தருதல். |
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
No comments:
Post a Comment