Tuesday, January 6, 2015

கருவிகள் 1600 : 121 – 160 : இலக்குவனார் திருவள்ளுவன்


கருவிகள் 1600 : 121 – 160 : இலக்குவனார் திருவள்ளுவன்


121.  இடைவீழ் மழைமானி    –    interceptometer  :        மரங்களின் கீழ் அல்லது இலைதழைகளின் வழியாக விழும் மழையளவை அளக்கும் மழைமானி. இடைவெட்டு மழைநீர் அளவி (-இ.) எனச்சொல்வதைவிட இடைவீழ் மழைமானி என்பது ஏற்றதாக அமையும்.
    122.   இடையீட்டு அளவி -  slip gauge / Gauge block / gage block / Johansson gauge / Jo blocks  : இடைவெளியைத் துல்லியமாக அளவிடும் கருவி. நேர் பொருளாக நழுவு அளவி / நழுவல் அளவி என்றெல்லாம் சொல்லாமல் செயல்பாட்டு அடிப்படையில் சொல்லலாம். இடைவெளி அளவி என மற்றொன்று(gap gauge) உள்ளமையால் இடையீட்டு அளவி என்பது பொருத்தமாக இருக்கும்.
    123.    இடைவெளியளவி/ உணரளவி -gap-gauge /feeler gauge
   124.     இணக்குக் காற்றழுத்தமானி   -  fortin barometer   :    பிரெஞ்சு இயற்பிய பொறியாளர் இயேன் ஃபார்டின் (Jean Fortin ) என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டதால் அவர் பெயரால் அழைக்கப்படுவது. ஏற்றவாறு சரி செய்து கொள்ளக்கூடிய தொட்டி உடைய கிண்ணவகைக் காற்றழுத்தமானி. இணக்குக்காற்றழுத்தமானி எனலாம்.
   125.  இணை ஆழ அளவி -  vernier depth gauge :   அறிவியலாளர் பியர் வெர்னியர் (Pierre Vernier) பெயரால் அழைக்கப்படும் இணைஅளவி உடன் இணைக்கப்பட்டுள்ள அளவுக் கருவி. குறுகலான ஆழப்பகுதிகளின் ஆழத்தை அளந்தறியப்பயன்படும் கருவி.
   126.  இணைப்பு வெப்பமானி       attached thermometer
127.  இணை-பிளவு உறழ்மானி  parallel-slit interferometer
  128.  இதய மின்வரைவி    electro   cardiograph :  இதயத்துடிப்பினை அளவிட்டுப்பதியும் மின்னணுக்கருவி. இதனை மின் இதயத்துடிப்பு வரைவி, இதயமின்னல் வரைவி, மின்னிருதயத்துடிப்புப் பதிகருவி, இதயத்துடிப்பலைப்பதிவி, மின்னணு இதயத் துடிப்புப் பதிவு கருவி, என வெவ்வேறு வகையாகக் குறிப்பிடுகின்றனர். ஒரே சொல்லைக் கையாளாவிட்டால் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கருவி எனத் தவறான எண்ணம் ஏற்படும். சுருக்கமாக இதய மின்வரைவி எனலாம். இதன் மூலம் எடுக்கப்படும் இதயநிலை ஒளிப்படம் (ECG:electro –cardiogram or EKG: Elektrokardiogramm) இதய மின்வரையம் (-மூ.211) எனப்பெறும். இதனை மின் இதயத்துடிப்புப் பதிவி, இதயத்துடிப்பலைப்பதிவு, மின்முறையிதயத்துடிப்புப் பதிகருவி, இதயத் துடிப்புப்பதிவி, என்றெல்லாம் கூறுவது பொருந்தாது. வரைவிக் கருவியில் எடுக்கப்படும் இது வரையம் ஆகும்.
   129.  இதய முடுக்கி  -  pacemaker    செயற்கை இதய மின்னியக்கி
இதய முடுக்கி . இதயத்துடிப்பை சீராக்க உடலின் உள்ளே இதயத்துடன் பொருத்தப்படும் கருவி. இயக்கஆக்கி என்னும் பொருளில் அமைந்துள்ளது. இதனை இதயஇயக்கி என்றால், இதயம் இயங்காதபொழுது இயக்கச் செய்வதாகப் பொருள் கொள்ளலாம். இதயத்தின் இயக்கம் சீராக அமைய முடுக்கிவிடுவதால் இதய முடுக்கி எனலாம்.
130.  இதழி உலவை மானி   – vane anemometer
131.   இதள் காற்றழுத்தமானி   – mercurial barometer / mercury barometer
132.  இதள் தாரை காந்தமானி  –   mercury jet magnetometer
133.  இதள் வளியழுத்தமானி  -   mercury manometer
134.  இதள் வெப்பமானி  – mercury thermometer
135.  இயக்கக் குளிர்விப்பி மின்மானி  – dynamic condenser electrometer
136.  இயக்கிமானி    -   motor meter
137.   இயங்கிரும்புமானி   – moving-iron meter
138.  இயங்கிரும்பு மின்வலிமானி   – moving-iron voltmeter
139.  இயங்கிரும்பு மின்னோடிமானி  – moving- iron ammeter
140.  இயங்குகாந்த மின்வலி மானி  -  moving-magnet voltmeter
141.  இயங்குசுருள் மின்வலிமானி  – moving-coil voltmeter
142.  இயங்குசுருள் மின்னோடிமானி  -  moving-coil ammeter
143.  இயங்குசுருள்மானி   – moving-coil meter
144.   இயல் காற்றழுத்தமானி – normal barometer
145.  இயல் தகவு வெயில்மானி – normal-incidence pyrheliometer
146.  இயல்-தட்டு உலவை மானி – normal-plate anemometer
147.   இயல்பட்டை மின்னோடிமானி   -  taut-band ammeter
148.  இயற்பிய வேதியிய வெப்பமானி  – physiochemical thermometer
149.  இயைபுமானி   -   harmonometer  :  ஒலிகளின் இசைவுப்பொருத்தங்களை அளப்பதற்கான கருவி (-செ.). ஒலி இயைபுமானி> இயைபுமானி
150. இரட்டை மானி – dual meter
151.    இரட்டைக் குவிய வெப்பமானி   -  double focusing thermometer
152.    இரட்டைக்குவியனிறமாலைமானி  -   double focusing spectrometer
153.  இரட்டைச் சுழல் நோக்கி   -  gyroscope couple
154.  இரட்டைப்பின்னேகு அலைவுநோக்கி  – dual-trace oscilloscope
155.    இரண்டாம்நிலை இகத்திரண்மை அலைமாலை மானி -  secondary ion mass spectrometer
156.    இரத்த உயிர்மிமானி  – haemocytometer
157.    இரவுத் தொலைநோக்கி   –   night-vision telescope :   இரவு பார்வைத் தொலைநோக்கி என்பதைச் சுருக்கமாக இரவு தொலைநோக்கி எனலாம்.
  158.    இரிவுமானி -  tiltmeter :   நிலப்பரப்பின் மிகச்சிறு சாய்வையும் அளவிடும் கருவி. சாய்மானி (inclinometer)என ஒன்று உள்ளது.இரிதல் என்றால், விலகி இருத்தல் சரிந்து இருத்தல் என்னும் பொருள்கள் உள்ளன. இரிவு அடிப்படையில் இதனை இரிவுமானி எனலாம்
   159.   இருகூறு மின்மானி – Hoffman electrometer : ஆஃபுமன் (Hoffmann) என்னும் அறிவியலாளர் பெயரால் குறிக்கப் பெறுவது. இயல்பாக மின்மானியில் 4 பிரிவுகள் இருக்கும். இரு பிரிவுகள் கொண்டு படைக்கப்பட்ட மின்மானி. எனவே, இருகூறு மின்மானி எனலாம்.
     160.   இருட்டு வரைவி   -  scotograph :  இருட்டில் அல்லது பார்க்காமல் எழுத உதவும் கருவி. இருளில் எழுத உதவும் பொறி.(-செ.) அல்லது இருளில் எழுதி(-இ.) எனச் சொல்வதைவிட இருட்டில் எழுத உதவும் வரைவி என்ற பொருளில் இருட்டு வரைவி எனலாம். [ஃச்கோடோசு / sko`tos என்ற கிரேக்கச் சொல்லிற்கு இருட்டு எனப் பொருள்.]
(பெருகும்)

http://www.akaramuthala.in/wp-content/uploads/2014/10/ilakkuvanar_thiruvalluvan+11.png- இலக்குவனார் திருவள்ளுவன்



No comments:

Post a Comment

Followers

Blog Archive