Tuesday, January 6, 2015

கலைச்சொல் தெளிவோம் 29: வியலி – giant

வியலி-giant
வியலி-giant
kalaicho,_thelivoam01

 29: வியலி – giant

மிகப்பெரிய விண்மீன்gaint – அரக்கன் எனப்படுவதும் பொருத்தமாக இல்லை. அரக்கன் என்பது உயர்திணையாக வருவதால் வேறுவகையாக எண்ணுவதற்கு இடமில்லை. மிகப்பெரிய கோளை வியாழன் எனக் குறிக்கிறோம். வியல் என்பது அகலத்தைக் குறிப்பதால் மிகவும் அகன்ற பெருங்கோள் வியாழன் எனப்படுவது பழந்தமிழரின் அறிவியல் புலமையைக் காட்டுகிறது. வியல் 113 இடங்களிலும் வியன் 94 இடங்களிலும் சங்கஇலக்கியங்களில் வருகின்றன. அகன்ற பரப்புடைய ஊர் வியலூர் என அழைக்கப்பட்டமையும் பின்வரும் அடியால் தெரியவருகின்றது.
வாலைவேலிவியலூர்அன்ன (மாமூலனார்: அகநானூறு: 97.13)
அகன்று பரந்துள்ள பரப்பு வியல் என்பதன் அடிப்படையில் குறிக்கப்படுவதால் இவற்றின் அடிப்படையில் அகலமான விண்மீனை வியலி என்பது சரியாக இருக்கும்.
வியலி – giant
மீ வியலி-super giant
 - இலக்குவனார் திருவள்ளுவன்


No comments:

Post a Comment

Followers

Blog Archive