Wednesday, January 7, 2015

கருவிகள் 1600 : 161 – 200 : இலக்குவனார் திருவள்ளுவன்

கருவிகள் 1600 : 161 – 200 : 

இலக்குவனார் திருவள்ளுவன்


161. இருட்புல நுண்ணோக்கி – darkfield microscope   :  இருட்டுப்பின்னணியில் ஒளிப்பொருளை அறிய உதவம் இருட்புல நுண்ணோக்கி.
162. இருநிற நோக்கி – dichroscope   : படிகங்களின் வண்ணக்கோலத்தை அளவிடப்பயன்படும் கருவி. (மூ.182)
163. இருபக்கக் கதிரியமானி – net radiometer : கதிர்ச்செறிவுமானியின் வகைகளுள் ஒன்று. வளிமண்டிலவியல் பயன்பாடுகளில் பூமியின்மேற்பரப்பில் நிகரக் கதிர்வீச்சினை அளவிடப் பயன்படுவது. பொதுவாகச்சூழ்உடலியல் துறையில் பயன்படுகிறது. நிகரக் கதிர்வீச்சளவி, இருபக்கக் கதிர்வீச்சு அளவி என இரு பெயர்கள் வழக்கத்தில் உள்ளன. கதிரிய மானியான இதனைக் கதிர்வீச்சு அளவி எனச் சொல்லக்கூடாது. நிகரக்கதிரியமானி எனவும் சொல்லலாம்.
164. இருபடல மின்மானி – bifilar electrometer
165. இரும்பு நோக்கி – sideroscope  : காந்தத்தைப் பயன்படுத்தி ஒரு பொருளில் உள்ள இரும்பினைக்கண்டறிய நோக்கி ஆராயும் கருவி
166. இரும்புமானி – ferrometer  :  1. இரத்தத்தில் உள்ள   இரும்பின் அளவைக் கண்டறிய உதவுவது. 2. இரும்பு, எஃகு   ஆகியவற்றின் காந்த உட்புகுதிறனையும் பின்னைடைவு நிலையையும் அறிய உதவுவது. பொதுவாக இரும்புமானி எனலாம்.
167. இருமாழை வெப்பமானி – bimetallic thermometer
168. இருமுனையத் திருத்தி-மிகைப்பிமானி – diode rectifier-amplifier meter
169. இருமை நுண்ணோக்கி – binocular microscope  : இரட்டைநுண்ணோக்கி, இருகண் நுண்ணோக்கி, இணைப்பார்வை நுண்ணோக்கி, இருவிழிநுண்ணோக்கி என வெவ்வேறு பெயர்களில் குறிப்பிடுகின்றனர். இருமைநுண்ணோக்கி எனலாம்.
170. இருமை நோக்கி – binocular :  இரு தொலைநோக்கிகளைக் கொண்டு இரு கண்களாலும் ஒரே சமயத்தில் தனித்தனியே பார்க்க உதவும் கருவி. தொலைநோக்கி என்பது தெலசுகோப்பு(telescope) என்பதைக் குறிக்கும். ஆகவே சிலர் இரு தொலைநோக்கி என உரைப்பது பொருந்தாது.இருவழி நோக்கி என்பதன் சுருக்கமாக இருமை நோக்கி எனலாம். (இருநோக்கி என்றால்இரண்டு நோக்கிக் கருவிகள் எனத் தவறாகப் பொருள் கொள்ள நேரிடலாம்.)
171. இருமைத் தொலைநோக்கி – binocular telescope
172. இருவரி வரைவிdiplograph  : ஒரே நேரம் இரு வரிகளை எழுதுவதற்குரிய கருவி.
173. இருள் புலநுண்ணோக்கி – dark field microscope  : இருட்டுப்பின்னணியில் ஒளிப்பொருளை அறிய உதவம் இருட்புல நுண்ணோக்கி. இருள் புலநுண்ணோக்கி, இருள்வெளி நுண்ணோக்கி என இரு பெயர்களில் குறிப்பிடுகின்றனர். இருள்புலநுண்ணோக்கி என்பதையே நிலைப்படுத்தலாம்.
174. இருள்நோக்கி -scotoscope  :   இருட்டில் பொருள்களை நோக்கிக் கண்டறிய உதவும் கருவி. இருள்நிலை நோக்கி என்பதன் சுருக்கமாக இருள்நோக்கி எனலாம்.
175. இரைச்சல் கதிரியக்கமானி/ ஒலி மட்டமானி – noise dosimeter/ sound level meter
176. இரைச்சல் பாய்மமானி – noise-type flowmeter
177. இரைப்பை அகநோக்கி – gastroscope
178. இல்லொளி வரைவிtyphlograph / nyctograph   : பார்வையற்றவர்கள் சுருங்கிய வடிவில் எழுதுவதற்கு உதவும் கருவி. முதலில் பார்வை யற்றவர் எழுத்துதவி என்னும் பொருளில் தைபுலோகிராப்பு / typhlograph எனப் பெயரிட்ட அறிவியலாளர் சார்லசு இலட்சுவிட்சு [Charles Lutwidge Dodgson (better known as Lewis Carroll) ], பின்னர் இருட்டில்வரைவி (nyctograph)எனப் பெயரிட்டார். இருட்டு வரைவி (scotograph) யில்இருந்து வேறுபடுத்துவதற்காக, பார்வை ஒளி இல்லாதவர்களும் பார்வையிருப்பினும் ஒளிஇல்லாத நேரத்திலும் எழுத உதவுவதால் பொதுவாக இல்லொளி வரைவிஎனலாம்.
179. இலக்கமுறை ஒத்தியக்கமானி – digital synchronometer
180. இலக்கமுறை நிகழ்வெண் மானி – digital frequency meter
181. இலக்கமுறை மின்வலி மானி – digital voltmeter
182. இலக்குவகை-பாய்மமானி – target-type flow meter
183. இலிவளிமானி – methanometer : நிறமிலி, மணமிலி, வளியை இலிவளி(மீத்தேன் /methane) எனலாம். இலிவளியைக் கண்டறிவதற்கான கருவி. [எரிவாயு என்ற பொருளிலும்  மிகுதியும் தீமை தரக்கூடிய வளி என்ற பொருளிலும் மீத்தேன் என்பதைத் தீ வளி  எனலாம். அவ்வாறாயின் தீ வளி மானி ஆகும்.]
184. இழுப்பு உணக்கமானி – aspiration psychrometer
185. இழுப்பு வானிலை வரைவி – aspiration meteorograph
186. இழுப்பு வெப்பவரைவி – aspiration thermograph
187. இழுவிசைமானி – traction meter
188. இழை ஒளியிய சுழல் நோக்கி – fiber-optic gyroscope
189. இழை ஒளியிய வெப்பமானி – fiber-optic thermometer
190. இழை ஒளியியக் காந்தமானி – fiber-optic magnetometer
191. இழை மின்மானி – string electrometer
192. இழை மின்கடவுமானி – string galvanometer / Einthoven galvanometer : மனிதஇதயத்தின் மிகச்சிறு மின்னோட்டங்களையும் அறிந்து பதியும் தொடக்கக்காலக்கருவியே இழை மின்கடவுமானியாகும். நோபள் பரிசாளர் ஆகிய வில்லியம் ஐந்தோவன்( Willem Einthoven :1860–1927) என்னும் அறிவியலாளர் பெயரில் ஐந்தோவன் மின்கடவுமானி என்றும் அழைக்கப்பெறுகிறது.
193. இழைநயமானி – arealometer
194. இழைமநோக்கி – fiberscope  :  இழைஒளிமத்தின் மூலம் அணுகமுடியாத பகுதிகளை ஆராய உதவும் கருவி
195. இழைவியக்க மின்வலிமானி – slide-back voltmeter
196. இழைவு நிறஒப்புமானி – lovibond tintometer :  ஒவ்வொன்றும் முந்நிறங்கள் கொண்ட இழைவுகள்(slides) கொண்ட நிறஒப்புமானி.
197. இளக்கமானி – flexometer
198. இளஞ்சிவப்பு நிறமாலைமானி – orange spectrometer
199. இனிமமானி – glucosemeter : சக்கரைமானி என்றால், நீர்மத்திலுள்ள சக்கரை அளவைக் கணக்கிடும் (saccharometer) கருவியாகும். எனவே, வேறுபடுத்திக் கூற வேண்டும். குருதியில் உள்ள இனிமத்தை (glucose) அளவிடும் கருவி. ஆதலின் இனிமமானி எனலாம்.
 200. ஈடுசெய் வெயில்மானி – compensation pyrheliometer

(பெருகும்)

http://www.akaramuthala.in/wp-content/uploads/2014/10/ilakkuvanar_thiruvalluvan+11.png- இலக்குவனார் திருவள்ளுவன்



No comments:

Post a Comment

Followers

Blog Archive