தாம்வரம்பாகிய தலைமையர் என்கிறது திருமுருகாற்றுப்படை(134).
டீன்/ dean என்பதற்குத் தலைமையர்
என்று சொல்லலாம் என அறிஞர் ஔவை அவர்களிடம் முன்பு ஒருமுறை(199௦)
சொன்னதற்கு, இச் சொல் சரியாக இருந்தாலும், வேறு வகை யில் (தலைமயிர் என)
இழிவாக மாற்றிக் கூறுவதற்கு இடம் தரும் என்பதால் வேண்டா என்றார். ஆனால்,
சங்கஇலக்கியத்திலேயே இச்சொல் உள்ளதை இப்பொழுதுதான் அறிந்தேன்.
அறிஞரின் கருத்தும் புறந்தள்ள இயலா ஒன்றே. எனவே, தலைமை(1) அடிப்படையில் தலைமையாளர் எனச் சொல்லலாம்.
தலைமையாளர்-dean

No comments:
Post a Comment