361. ஒப்புநோக்கு அடர்த்திமானி  – comparator-densitometer
362. ஒப்புமானி – machometer / machmeter  : விமானக்காற்று ஒப்புவிசைமானி: காற்று வேகத்தின் கூறளவாக விமான வேகத்தை கணித்தளவிடும் கருவி (-செ.).ஒலி விரைவிற்கும் விண்ணூர்தி விரைவிற்கும் உள்ள ஒப்புமையைக் காட்டும் கருவி. எனவே சுருக்கமாக ஒப்பு மானி எனலாம்.
363. ஒல்லைமானி – velometer :  காற்றின் விரைவை அல்லது காற்றின்ஊடாகச் செல்லும் விண்ணூர்தியின் விரைவை அளக்கும் கருவி. வேகம் என்னும் பொருளில் தமிழில் கதழ்வு, கடுகல், முடுகல்,வல்லை, ஒல்லை முதலான 12   சொற்கள் உள்ளன (பிங்கல நிகண்டு 2194 & 2195). வேகமும் விரைவும் பிற இடங்களில் பயன்படுத்தப்படுவதால் இங்கே ஒல்லை என்னும் சொல்லை எடுத்தாளலாம். ஒலிபெயர்ப்பாக வெலோமீட்டர் எனக் குறிப்பதைவிட, ஒல்லையில் செல்வதைக் கணக்கிடும் கருவிக்கு ஒல்லைமானி எனப் பெயரிடலாம். வேகம், விரைவு, ஒல்லை என்பன ஒரு பொருள் தந்தாலும்,வேகமானி வேறு, விரைவுமானி வேறு, ஒல்லைமானி வேறு என்பதைப் புரிந்து கொண்டு கலைச்சொற்களைப் பயன்படுத்த வேண்டும். “வெருவந்த செய்து ஒழுகும் வெம் கோலன் ஆயின் ஒருவந்தம் ஒல்லைக் கெடும்”( திருக்குறள் 563) என நாம் அழிவின் விரைவைக் குறிப்பிட ஒல்லை என்னும் சொல்லைப் பயன்படுத்துகிறோம். விரைந்து சென்று வருவதை “ஒல்லையில் சென்று வருக ” என்று படைப்புகளில் காண்கின்றோம். எனவே, பயன்படுத்தினால் எளிய சொல்லாக மாறும்.
364. ஒலி வரைவி – phonograph :  இசைப்பெட்டி: நீள்உருளைகளைப் பயன்படுத்திச் செய்யப்பட்ட பழைய ஒலிப்பதிவுமுறை இசைப்பெட்டி(-ம.478);ஒலி மீட்பாக்கி : ஒலியை மீண்டும் உருவாக்கும் கருவி. இசைத்தட்டில் பதிந்த ஒலியை மீண்டும் கேட்கும்வடிவத்தில் அளிக்கும்.(-மூ.15); சுருக்கமாக ஒலி வரைவி என்றே சொல்லலாம்.
365. ஒலிச்செறிப்பி  – sound irradiator  : ஒலிச்செறிவை வெளிப்படுத்தும் வகையில் ஒலிஅளவை ஒருமுகப்படுத்தும் கருவி. ஒலிச்செறிப்பி (-செ.)
366. ஒலித்தொலைவு மானி – phonotelemeter
367. ஒலிநோக்கி – phonendoscope  :    1. உள்ளொலி பெருக்கி :மனித உடலிலுள்ள சிறு ஒலிகளையும் தெளிவாகக் கேட்பதற்கு வகை செய்யுங் கருவி (-செ.ப.).
  1. மாடுகளின் இதய ஆராய்வுக் கருவி
  2. கால்நடைகளின் மார்புப்பகுதிகளை மட்டும் அல்லாமல் வயிற்றுப்பகுதி ஒலிகளையும் ஆராய நோக்கும் கருவி.
  3. உள்ளொலிபெருக்கி: கேட்பொலிகளைப் பெருக்கிக் காட்டும் ஓர் இதயத்துடிப்புமானி (-ம.க.பே.846)
உள்ளொலி பெருக்கி என்பது ஒலிபெருக்கி( loud speaker) என்ற தவறான பொருளில் உணர வாய்ப்பு உள்ளது. பொதுவாக உடலின் உட்பகுதியில் உள்ள ஒலிகளைக் கேட்டு ஆராய நோக்க உதவும் கருவி என்பதால் உடலொலிநோக்கி என்னும் பொருளில் சுருக்கமாக ஒலிநோக்கி எனலாம்.
368. ஒலிமானி – phonometer : ஒலியை அளவிடுவது.
369. ஒலியலை உலவை மானி – sonic anemometer
370. ஒலியலை வெப்பமானி  – sonic thermometer
371. ஒலியலைவரைவி – phonautograph / sympalmorgraph :  ஒலியலைகளைப் பதிவு செய்யும் கருவி; ஒலியலைப்பதிவுக்கருவி (-செ.).எனினும் ஒலியலைவரைவி எனச் சுருக்கமாகக் கூறலாம்.
372. ஒலியிய விரைவெண்மானி / விரைவெண்மானி / விரைவெண் குறிப்பி – acoustic Mach meter / Mach meter/ Mach indicator : “மாக் எண் அல்லது மேக் எண் (Mach number – Ma or M) என்பது வளியினூடாக அல்லது ஏதாவதொரு பாய்ம ஊடகத்தினூடாகச் செல்லும் ஒரு பொருளின் வேகத்தை அதே ஊடகத்தில் ஒலியின் வேகத்தால் வகுக்க வரும் எண்ணாகும். பொதுவாக இது, ஒலியின் வேகத்தில் அல்லது அதன் மடங்குகளிலான வேகத்தில் செல்லும் வானூர்திகள், ஏவுகணைகள் போன்றவற்றின் வேகத்தைக் குறிக்கப் பயன்படுகின்றது” (http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D ).
நீர்மத்தில் நகரும் பொருளுக்கும் ஒலி விரைவிற்கும் உள்ள தொடர்பு விகிதத்தைக் குறிப்பிடும் பருமமிலி (dimensionless) அலகு, ஏர்னசுட்டு மாக்கு (Ernst Mach) என்னும் ஆசுதிரிய இயற்பியலாளர் பெயரில் மாக்கு எண் எனப்படுகிறது. பிரான்சில், எமைலி சாரௌவு (Émile Sarrau) என்னும் அறிஞர் பெயரில் சாரௌவு எண் எனப்படுகிறது. ஒலிச் சார்புவேக எண் (-இ.) எனத் துறைகளில் குறிக்கப்பெறுகிறது.விரைவைக் குறிக்கப்பயன்படும் இவ்வெண்ணை நாம் விரைவெண் எனலாம். ஒலியிய விரைவெண்ணை அறிய உதவும் கருவி என்பதால் – ஒலிச்சார்பு வேகஅளவி (-இ.)   எனக்கூறாமல் சீர்மை கருதி – ஒலியிய விரைவெண்மானி / விரைவெண்மானி எனலாம்.
 373. ஒலியலை உயரமானி – sonic altimeter
374. ஒலியலை உலவை மானி – sonic anemometer
375. ஒலியிய நிறமாலைமானி – acoustic spectrometer
376. ஒலியலை நீர்ம-மட்ட மானி – sonic liquid-level meter
377. ஒலியிய நுண்ணோக்கி – acoustic microscope : மிகு உயர்நிகழ்வெண் கொண்ட மீஒலி அலைகளைப் பயன்படுத்திச் செயல்படும் ஒலியிய நுண்ணோக்கி.
378. ஒலியிய மின்கடவுமானி  – Doppler current meter
379. ஒலியிய  உறழ்மானி – acoustic interferometer
380. ஒலியியக் கதிரி  – acoustic radiator
381. ஒலியியத் திரிபளவி – acoustic strain gauge
382. ஒலிவரைவி   – sonograph   :   ஒலியைப் பதிவு செய்து ஆராயும் கருவி.   ஒலி வரைபடம் என்பது இக்கருவி மூலம் பெறும் படத்தைத்தான் குறிக்கும். கருவியைக் குறிக்காது. எனவே, ஒலிவரைவி எனக்குறிப்பிட வேண்டும்.
383. ஒளியடர்மானி   – phaometer  :  ஒளி அடர்த்தியை அளவிடப் பயன்படுத்தப்பெற்ற பழைய கருவி.
384. ஒளி நிகர்ப்பி photocopier : ஒளிநகலி: ஒளிப்பட நகல்களை எடுக்கும் கருவி(-மூ.518); போல இருப்பதைக்குறிப்பிடும் 36 உவம உருபுகளுள் ஒன்றாக ‘நிகர்ப்ப’ என்னும் சொல்லையும் தொல்காப்பியர் குறிப்பிடுகிறார். எனவே, நகல் என்னும் அயற்சொல் அடிப்படையில் நகலி என்பதற்கு மாற்றாகப் படிமையை நிகர்ப்பி எனலாம். எனவே, ஒளிப்படிப்பொறியை, ஒளி நிகர்ப்பி எனலாம்.
385. ஒளி நுண்ணோக்கி  – light microscope
386. ஒளி பரவல் ஒளிமானி – light distribution photometer
387. ஒளி பெருக்கி  – photomultiplier : ஒளியாற் பெருக்கி, ஒளிப் பெருக்கி எனத் துறை அகராதிகள் தெரிவிக்கின்றன. ஒளி பெருக்கி என்பதே சுருக்கமாக உள்ளதால் ஏற்கலாம்.
388. ஒளி மின் கலம் – photo(electric)cell  : ஒளி மின் கலம் - ஒளிமின் விளைவினால் ஏற்படும் மின்காந்தக் கதிர்வீ்ச்சினால், மின்னோட்டத்தை உண்டாக்கும் கருவி (-மூ. 519).
389. ஒளி முகில்மானி – photonephelometer :      துகள்செலுத்து ஒளிஅளவி (-இ.) ஒளிபரவல் செறிவை அளவிடும் முகில்மானி. எனவே ஒளிமுகில்மானி எனலாம்.
390. ஒளி முனைவுமானி – photopolarimeter
391. ஒளிஊடாமைமானி – riometer  : ரியோ (Rio)என்பது Relative ionospheric opacity என்னும் ஆங்கிலச் சொற்களின் தலைப்பெழுத்துச் சொல்லாகும். விண்வெளியில், சிதைவகக் கோள (ionospheric) மண்டிலத்தில் ஒளிஊடாத் தன்மையை அளவிடும் கருவியாகும். ஒளிஊடாமைமானி எனலாம்.
392. ஒளியூடிமானி  – transmissometer  : காட்சி நெடுக்கஅளவி, காட்சித் தொலைவளவி என அரசுத் துறைகளில் சொல்லப்படுகிறது. காட்சி்க்கருவி என்பது பொதுவான வகையாகும். இவ்வகையில் இக்கருவி, ஒரு பொருளில் ஒளி ஊடுருவி அனுப்பப்படுவதையே அளவிட உதவுகிறது. எனவே, ஒளிஊடிமானி > ஒளியூடிமானி எனலாம்.
393. ஒளியெண்மானி – albedometer  கோள் ஒளிதெளிப்பி அளவி (-ஐ.),கோள் எதிர்பலிப்பு அளவி (-இ.), கோள் எதிரொளிப்பு அளவி(-இ.)என மூன்று பெயர்களில் குறிப்பிடுகின்றனர். இவற்றைவிடப் பொருத்தமான சொல்லே தேவை. கோள்களின் வாங்கொளி விகிதம் ஒளிஎண் எனப்படுகிறது. ஒளிஎண்(albedo) என்பது   ஒரு பரப்பிலிருந்து மறிக்கப்படும் ஒளியின் அளவுக்கும் படு ஒளியின் அளவுக்குமுள்ள வீதம் (-மூ.18) எனப்படும். இதனை அளவிடும் கருவி என்பதால் ஒளிஎண்மானி> ஒளியெண்மானி எனலாம்.        
  394. ஒளியேற்பு மானி – light meter/(galactometer)/ exposure meter           
395. ஒளிக் கதிரியமானி / ஒளி ஆலை / கதிரைப்பொறி  – crookes radiometer/ light mill/ solar engine
396. ஒளிக்கற்றை மின்கடவுமானி – light-beam galvanometer
397. ஒளிச் சரிவுமானி – photoclinometer :   திசையையும் செங்குத்திலிருந்து விலகலையும் ஒளிவழிப் பதியும் அளவைப் பொறி. சொற்சீர்மைகருதி ஒளிச் சரிவுமானி எனலாம்.
398. ஒளிச் சுற்றுமானி  – phototachometer : ஒளியின் விரைவை அளக்கும் கருவி.
399. ஒளிச்சிதறல்மானி – scopometer
400. ஒளிநிகரி –  photostat :  அச்சியற்றிய அல்லது எழுதிய பகுதியின் படி எடுக்கும் கருவி. (மூ.522) படவுருப் படிவமைவு, ஆவணங்கள்-வரிவடிவங்கள் முதலியவற்றின் படியுருவங்களை எடுப்பதற்கான நிழற்பட அமைவு( (ம 479) , படவுருப்படிவம் , நிழற்பட நேர்படியுருவம். சுருக்கமாக ஒளிநிகரி எனவும் இதி்ல் எடுக்கப்படும் படியை (photostat copy) ஒளிநிகரிப்படி > ஒளிப்படி எனவும் கூறலாம்.
http://www.akaramuthala.in/wp-content/uploads/2014/10/ilakkuvanar_thiruvalluvan+11.png

- இலக்குவனார் திருவள்ளுவன்