kalaichol-thelivoam03 
சிறுநனி(7) : மிகச்சிறிய பொழுதைக் குறிக்கும் வகையில் இச்சொல்லைக் கையாண்டுள்ளனர்.
சிறுநனி நீ துஞ்சி ஏற்பினும், அஞ்சும் (கலித்தொகை ௧௨.௮)
சிறுநனி தமியள் ஆயினும் (புறநானூறு ௨௪௭.௯)
சிறு நனி வரைந்தனை கொண்மோ பெருநீர் (அகநானூறு ௧௮௦.௧)
நனி என்னும் சொல் மிகுதி என்னும் பொருளைத் தந்தாலும் சிறுநனி எனச் சிறு என்னும் சொல்லுடன் சேர்ந்து ஒற்றைச் சொல்லாகும் பொழுது குறுகிய பொழுதையே குறிக்கிறது.
short period-குறுங்காலம்(பொரு.,) என்றும் short term-குறுகியகாலம், குறுங்காலம்(மனை.,உள.,) என்றும் அனைத்துத் தரப்பாராலும் கையாளப் படுகின்றன. இவற்றை நாம் வேறுபடுத்தலாம்.
சிறுபொழுதிற்குள் நடைபெறும் செயல் அதன் விரைவைத்தானே குறிக்கும்! அந்த வகையில் விரைவு என்னும் பொருளில்,
சிறுநனி வரைந்தனை கொண்மோ (ஐங்குறுநூறு: 180)
என்னும் அடி வந்துள்ளது. எனவே, உடனடியாக ஆற்ற வேண்டியதைச் சிறுநனி எனக் குறிக்கலாம். Instant என்பதற்கும் உடனடி என்றே ஆட்சிச்சொல்லகராதி குறிப்பிடுவதால், இவ்வாறு வேறுபடுத்தலாம்.
குறுங்காலம்-short term
சிறுநனி-swift/instant
சிறுபொழுது-short period