(சட்டச் சொற்கள் விளக்கம் 926 – 930 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி)

931.  Association  கூட்டு   இயைபு  

ஒன்று சேர்‌ அமைப்பு  

கூடுதல், இணைதல், சேர்த்தல்,  சங்கம், கழகம், குழாம்  தோழமை, நட்பு, நெருங்கிய பழக்கம், கருத்துத்தொடர்பு எனப் பல பொருள்கள்.  

சட்ட அடிப்படையில், ஒரு சங்கம் என்பது ஒரு பொதுவான நோக்கம் அல்லது ஆர்வத்தைப் பகிர்ந்து கொள்வோரின் குழுவாகும்.    இது மற்றொருவருடன் தொடர்பு கொள்வது அல்லது நிறுவனத்தை வைத்திருப்பது எனப் படலாம்.  

வெளிநாட்டுப் பங்களிப்பு (ஒழுங்குமுறை)ச் சட்டம், 1976 (The Foreign Contribution (Regulation) Act, 1976 – FCRA)   Unlawful association – சட்டப் புறம்பு குழு / சட்ட எதிர்க்குழு / சட்ட முரண் குழு   வன்முறை அல்லது அச்சுறுத்தலைச் செய்ய மக்களை ஊக்குவிக்கும் அல்லது அதற்கு உதவும் ஒரு குழு அல்லது அமைப்பு அல்லது அதில் தொடர்பு கொண்டிருத்தல்.   Common law association   பொதுச் சட்டச் சங்கம் –  ஒப்பந்த உடன்படிக்கையின் மூலம் ஒரு சங்கத்தை உருவாக்குநர் குழு; ஆனால் பாராளுமன்றத்தின் எந்தச் சட்டத்தின் கீழும் இணைக்கப்படாதது.   

சங்கம் என்பது பின்வரும் நால் வகையில் அடங்கும்.  

A social or business relationship குமுக அல்லது வணிகத் தொடர்புடைமை  

The act of consorting with or joining with others மற்றவர்களுடன் கூடும் அல்லது சேரும் செயல்  

The sharing of criminal intent குற்ற நோக்கப் பகிர்வு  

The act of having contact or communication with another   மற்றவருடன் தொடர்பு கொள்ளல் அல்லது தொடர்புறுத்தல்.
932. Associated personsதொடர்புடையவர்கள்  

தொடர்புடை ஆட்கள்  

ஒன்று சேர்ந்தவர்கள்  

குடும்பச் சட்ட விதியம் 1996 இன் பிரிவு 62(3) இல்(section 62(3) of Family Law Act 1996) வரையறுக்கப்பட்டுள்ள ‘தொடர்புடையவர்கள்’ என்பது குறிப்பிடத்தக்க கால அளவுள்ள அல்லது ஒருவருக்கொருவர் நெருக்கமான தனிப்பட்ட உறவைக் கொண்டவர்கள் அல்லது கொண்டிருந்தவர்கள்.  
933. Associate languageஇணை மொழி  

இணை மொழி என்பது குறிப்பிட்ட நோக்கங்களுக்காக அதிகாரப்பூர்வ மொழியுடன் கூடுதலாகப் பயன்படுத்தப்படும் மொழியாகும். இந்தியாவில், ஆங்கிலம் இந்தி மொழியுடன் இணைந்த அதிகாரப்பூர்வ மொழியாகும்.  


இணைப்பு மொழி எனச் சொல்வது தவறு. Link language என்பதுதான் இணைப்பு மொழி. அலுவல் மொழிக்கு இணையான மொழி என்பதால் இணை மொழி என்பதே சரியாகும்.
934. Associate member      இணை உறுப்பினர்  

கீழிணை உறுப்பினர்  

மன்றம், மன்றகம், குழாம், சங்கம், விடுதி போன்றவற்றில் உறுப்பினராக இருந்தாலும், பகுதி உரிமைகளும் பகுதிச் சலுகைகளும்  அல்லது கீழ்நிலைத் தகுதி மட்டுமே கொண்டவர்.  

இணை உறுப்பினர் என்பவர் ஒரு நிறுவனம் அல்லது குழுவில் பகுதி உறுப்பினராக இருப்பவர். அவர்களுக்குச் சில துய்ப்புரிமைகள் இருக்கலாம் ஆனால் முழு உறுப்பினரின் அனைத்து உரிமைகளும் பொறுப்புகளும்  இல்லை.  

இணை உறுப்பினர் என்பது உறுப்பினரின் எழுத்துப்பூர்வப் பரிந்துரையின் பேரில், அவரது எழுத்துப்பூர்வ முன் இசைவுடன்  தனது உரிமைகளையும் கடமைகளையும் நிறைவேற்றுவதற்காக வீட்டுவசதிச் சங்கத்தின் உறுப்பினராக முறையாக அனுமதிக்கப்பட்ட, கணவன், மனைவி, தந்தை, தாய், உடன்பிறந்தான், உடன்பிறந்தாள், மகன், மகள், மருமகன், மருமகள், உடன்பிறந்தாரின் மகன், உடன்பிறந்தாரின் மகள் ஆகியோரில் ஒருவர் ஆவர். இவர் பங்குச்சான்றிதழில் இரண்டாம் இடத்தில் குறிக்கப்பெறுவார்.  

காண்க Associateship
935. Association of individualsதனியர்கள் சங்கம்  

தனியாட்களின் கழகம்   (இந்திய ஒன்றியத்தின் குடிமை உரிமைகள் பாதுகாப்புச் சட்டம், 1955, பிரிவு 14.விளக்கம்(2.)(அ) S. 14Exp(a) PCRA, 1955)  

a body of individuals (BOI) / Association of Persons (AOP) என்றும் குறிக்கப் பெறும்.  

தனியர்கள் சங்கம் என்பது ஒரு பொதுவான நோக்கத்தை அடைவதற்கு அல்லது கூட்டு வணிக நடவடிக்கையில் ஈடுபடுவதற்காக ஒன்று கூடும் தனியர்கள், நிறுவனங்கள் அல்லது பிற நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட ஓர் அலகு அல்லது குழுவைக் குறிக்கிறது.

ஒரு நிறுவனத்தைப் போலன்றி, தனியர்கள் சங்கம் ஒரு தனிச் சட்ட நிறுவனம் அல்ல, ஆனால் அது வரிவிதிப்பு நோக்கங் களுக்காக ஏற்கப் பட்டுள்ளது  

தனியர்களின் சங்கம் (AOP) அல்லது தனியாட்களின் அமைப்பு (BOI), இணைக்கப்பட்டாலும் இல்லாவிட்டாலும், வரி வருவாய் மதிப்பீட்டிற்காக வருமான வரிச் சட்டம், 1961 இன் பிரிவு 2(31) இன் கீழ் ஒரு ‘தனியாயாளாக’க் கருதப்படும்.

(தொடரும்)