(மொழிப்போர் வரலாறு அறிவோம்!-8 : தொடர்ச்சி)

இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்திற்குப் பெரியாரின் சுயமரியாதை இயக்கமும் நீதிக்கட்சியினரும் துணை நின்றனர். இப்போராட்டத்தின் தொடர்ச்சியாகப் பெரியார் நீதிக்கட்சியின் தலைவராகவும் பொறுப்பேற்றார். “போராட்டத்திற்குத் தமிழ் அறிஞர்கள் மறைமலையடிகள், சோமசுந்தர பாரதியார், கா. அப்பாதுரை, இலக்குவனார்,  முடியரசன் போன்றோர் ஆதரவளித்தனர்.” (விக்கிபீடியா)

. போராட்டக்காரர்களிடம்  பிராமணர் எதிர்ப்பு உணர்வு ஆழமாக ஊன்றி இருந்தது. 100க்கு 3 பேராக உள்ள பிராமணர்களுக்காக 100க்கு 97 பேராக உள்ள பிராமணர்கள் இல்லாதவர்கள் பணத்தைச் செலவளிப்பது ஏன் என்று பெரியா் கேட்டார். இருப்பினும் பிராமணர்களிலும் ஒரு சாரார் இந்தி எதிர்ப்பிற்குக் கண்டனம் தெரிவித்தனர். மகாகனம் சீனிவாச சாத்திரியார், முன்னாள் உயர்நீதி மன்ற நீதிபதி சி.வி.சீனிவாச சாத்திரி, அறிஞர் உ.வே.சாமிநாகர், காஞ்சி பரவசுத்து இராசேகாபாலாச்சாரியார், பம்பாய் ‘இண்டியன் சோசியல் ரிபார்மர்’ ஆசிரியர் கே.நடராசன் முன்னாள் தலைமை வழக்குரைஞர் டி.ஆர்.வெங்கட்டராம சாத்திரியார், சென்னை பிரசா உரிமைச்சங்கத் தலைவர்கே.பாசுயம்,அரிசன சேவா சங்கத் தலைவர் திவான்பகதூர் பாசுயம் ஐயங்கார் வி.வி.சீனிவாச ஐயங்கார், சாரநாத ஐயங்கார் முதலான பலரும் குறிப்பிடத்தகுந்தவர்கள்.

தமிழ் பேசும் இசுலாமியர் இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்; ஆயினும் உருது பேசிய இசுலாமியர் அரசிற்கு ஆதரவளித்தனர். திருச்சியைச் சேர்ந்த பி. கலிஃபுல்லா என்ற இசுலாமியர் கழக (முசுலீம் லீக்கு) சட்டமன்ற உறுப்பினர் “நான் ஓர் இராவுத்தர். எனது தாய்மொழி தமிழ் என்பதில் எனக்கு எந்த அவமானமும் இல்லை; பெருமையே கொள்கிறேன். இந்தியை ஏன் இந்தியாவின் பொதுமொழியாகக் கொள்ளவேண்டும் என்று எவரும் எங்களுக்கு விளக்கவில்லை” என்று கூறினார்.

இந்தி எதிர்ப்புப் போராட்டம் ஆளும் பேராயக் கட்சியிலும் பிளவை ஏற்படுத்தியது. மூதறிஞர் இராசாசியும் அவர் ஆதரவாளர்களும் இந்திக்கு ஆதரவாக இருந்தனர். சத்தியமூர்த்தியும் சருவபள்ளி இராதாகிருட்டிணனும் இந்திக் கல்விக்கு எதிராக இருந்தனர். எனினும் அவர்கள் இந்தியை விருப்பப்பாடமாக அல்லது இந்திப்பாடத்திலிருந்து விலகிக்கொள்ள இசைவளிப்பதாகவோஇசைவளிப்பதாக இருக்க வேண்டும் என்றனர். அவ்வாறு சட்டத்தல்சட்டத்தில் திருத்தம் கோரினர். போராட்டக்காரர்களுக்கு எதிராகக் குற்றவியல் சட்டத்திருத்தம் 1932 இன் படி நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதையும் சத்தியமூர்த்தி எதிர்த்தார். 07.07.1938 அன்று அவர் காந்தியடிகளுக்கு இது குறித்து மடல் எழுதினார். அதில் மாணாக்கனின் பெற்றோரோ காப்பாளரோ இந்துத்தானி கற்பதில் இருந்து தன் மகன் அல்லது மகளுக்குக் கற்பிப்பது தன் மனச்சான்றுக்குப் புறம்பானது என்று குறிப்பிட்டு நீதிபதியின் முன்னிலையில் உறுதிமொமாழிஉறுதிமொழி அளித்தால் அச்சிறுவன் அல்லது சிறுமிக்கு விலக்கவிலக்கு அளிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார். ஆனால் நீதிபதி முன்னிலையில் உறுதி மொழி அளிக்கும் வாய்ப்பு எல்லார்க்கும் கிடைக்காது. அவரே இத்தகைய விலக்கை வெகுசில பெற்றோர்களே தருவர், எனவே, எதிர்ப்பின் வலுவின்மையை இது வெளிப்படுத்தும், அதனை முறியடிக்கவும் செய்யும் எனக் குறிப்பிட்டுள்ளார். இதனை இராசாசிக்குத் தெரிவிக்குமாறும் எழுதியிருந்தார். எனவே, அவர் பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன் என்பதுபோல் இரட்டை முகத்தைக் காட்டினார் என்பதே உண்மை.  மாநகர மன்றத்தில் இந்திக்கல்விக்கான தீர்மானத்தைக் கொண்டுவந்தவரே இவர்தான்.

பின்னரும் இந்திக்கல்விக்கான ஆதரவு நிலையே எடுத்தார். இந்தியைக் கற்றுக்கொள்ளுங்கள் என்பது காந்தியின் பரப்புரை. இல்லையில்லை! இந்தியைக் கற்றுக்கொள்வது கட்டாயம் என்பது சத்தியமூர்த்தி ஐயரின் கட்டளை. இந்தியை எதிர்க்கின்றவர்கள் தலைகளை வெட்ட வேண்டும் என்றவர் சத்தியமூர்த்தி. மக்கள் ஆதரவாளராகக் காட்டவும் கட்சிக்குள் தன்னை முன்னிலைப் படுத்தவும் வேடமிட்டார் என்பதே உண்மை.

(தொடரும்)